ஊழல் காரணமாக டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 5 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அவரது கேள்விக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதில் அளித்துள்ளார்.
1)
அத்வானி ஜி, ஜோஷி ஜி 75 வயதில் ஓய்வு பெற்றனர் இது பிரதமர் மோடிக்கு பொருந்தாது என அமித்ஷா சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?
மோடி உங்களுக்கும், இந்திய விரோதிகளுக்கும்
சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பது உங்கள் கேள்வியிலிருந்து வெட்ட வெளிச்சம் ஆகிறது.
2. எதிர்க்கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை பாஜகவில் இணைத்து கொள்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
நிச்சயமாக உங்களை பாஜகவில் சேர்க்க அனுமதிக்க மாட்டோம்
3. பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ். தேவை இல்லை என ஜெ.பி.நட்டா கூறியதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
அம்மா மகன் உறவில் உங்களால் என்றைக்கும் விரிசல் உண்டாக்கவே முடியாது கெஜ்ரிவால் அவர்களே
4. விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை உடைத்து ஆட்சியை கவிழ்த்து வரும் பாஜக அரசியல் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
ஒரே ஒரு மாற்றம் கெஜ்ரிவால் அவர்களே
உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழல் செய்தவன் தண்டனை பெற்றாக வேண்டும். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பது புரிகிறது. உடைப்பது எங்கள் வழக்கமல்ல, சேர்ப்பது மட்டுமே.
5.பாஜகவின் தாய் அமைப்பு ஆர்எஸ்எஸ், பாஜக தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்க வேண்டாமா?
தவறுகளை திருத்தும், தட்டிக் கேட்கும். மகனை தட்டிக் கொடுப்பதுதான் ஆர்எஸ்எஸ் இன் வழக்கம். பாஜக தவறு செய்பவர்களை தேச துரோகிகளை, ஊழல்வாதிகளை தட்டிக் கேட்கிறது என்பது உங்களுக்கு வருத்தமாக இருக்கிறதோ?
இவ்வாறு ஐந்து கேள்விகளுக்கு எஸ்.ஆர்.சேகர் பதில் அளித்துள்ளார்.