திமுக, காங்கிரஸ் ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர் : ஹெச்.ராஜா

மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்ளை இலங்கை கடற்படை கொன்றது என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சென்னை, புஷ்பா நகரில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை ஒட்டி இலவச மருத்துவ முகாமை தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ஏற்கனவே 50 கோடி பேர் மருத்துவ காப்பீடுக்காக  பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கெல்லாம் கார்டு  கொடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம், கடந்த வாரம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், 70 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தினை அறிவித்துள்ளார். இன்றைக்கு பார்த்தால், வயதானவர்கள் இதற்கு முன்னாடி வசதியாக இருந்திருக்கலாம். இப்போது அவர்களை பாதுகாக்க ஆட்கள் இல்லாமல் கூட இருக்கலாம். எந்த வருமான உச்ச வரம்பும் இல்லாமல் 70 வயது நிரம்பிய அனைவருக்கும் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால், மாநிலத்தில் முதலமைச்சர் காப்பீடு இருக்கலாம். அது இரண்டு லட்சம் ரூபாய் அளவிற்குத்தான். ஆனால் மத்திய அரசு வழங்கும் திட்டம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தில் மக்கள் இணைந்து பலன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சீசிங் ராஜா என்கவுன்டர் குறித்த கேள்விக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இன்னும் 24 பேரை முடிச்சிட்டா சரியா போயிடும் என நினைக்கிறேன். இந்த வழக்கில் எதுவும் சொல்றதுக்கு இல்லை.

திமுக, காங்கிரஸ் ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு மீனவர் மட்டும் கொல்லப்பட்டுள்ளார்,அதுவும் மீனவர் பிரச்சனைக்காக கொல்லப்படவில்லை. அன்றைக்கு இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயிச்சது. அதனால இலங்கை கடற்படை ஒரு மீனவனை கொலை செய்துள்ளது. அது தவிர எதுவும் நடைபெறவில்லை. மத்திய அரசாங்கம் மீனவர் விவகாரத்தில் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே போன்று கடல் எல்லையை தாண்டி வரும் இலங்கை மீனவர்களை நாமும் கைது செய்கிறோம். இதுபோன்று கைது செய்யப்படுவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். எனவே இனிவரும் காலங்களில் கைது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக நாம் என்ன செய்யலாம் என யோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top