திருச்சியில் அரசு மருத்துவர் மீது திமுகவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் மருத்துவ பணியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மிளகுப்பாறையில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கார்த்திகேயன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை இன்டிகேட்டர் போடாமல் திருப்பியதாக கூறப்படுகிறது.
அப்போது, மற்றொரு காரில் வந்த திமுகவை சேர்ந்த பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவரை திட்டியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆட்டோவில் வந்த பிரவீன் ஆதரவாளர்களும் மற்றும் திமுகவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் மருத்துவமனை வளாகத்திலேயே அரசு மருத்துவர் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் விடியா ஆட்சியில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அதற்கான சட்டத்தையும் வெளியிட்டது. எனவே மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பது மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.