தடை செய்யப்பட்டுள்ள PFI ன் அரசியல் கரம் எஸ்.டி.பி.ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அமரன்’ படத்தை கமல் தயாரித்துள்ளார். அப்படத்தில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எஸ்.டி.பி.ஐ., அப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் விநியோகித்து வருகிறது.
இந்தநிலையில், ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளத்தில்; தடை செய்யப்பட்டுள்ள PFI ன் அரசியல் கரம் எஸ்.டி.பி.ஐ ன் மிரட்டல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். பயங்கரவாதி பர்ஹான் வானிக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்திய தேசவிரோத கும்பல் தமிழகத்தில் இன்னமும் சுதந்திரமாக உள்ளனர். நாட்டை நேசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.