இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், முன்னாள் துணைப் பிரதமர், சிறந்த சிந்தனையாளர், திறமையான மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்றவர் எல்.கே. அதாவானி அவர்கள்.
சிறந்த தேசியவாதியான அத்வானி நாட்டை உறுதியான திசையில் வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். பாஜக வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பு நமது காரியகர்த்தாக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. அவருக்கு தமிழக பாஜக சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.