அரசமைப்பை சிதைத்த கட்சி காங்கிரஸ்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், இந்திரா காந்தி அரசமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசமைப்பை சிதைக்கும் பாவச்செயலை காங்கிரஸ்தான் செய்தது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மஹாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 288 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஏக்நாத் ஷிண்டே சிவசேனை-, அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், நேற்று (நவம்பர் 11) நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, “நாங்கள் (பாஜக) பாபாசாஹேப் அம்பேத்கரின் அரசமைப்பை மாற்றமாட்டோம், அதில் மாற்றம் செய்ய யாரையும் அனுமதிக்கவும் மாட்டோம்”.

அரசமைப்பின் அடித்தளத்தை மாற்ற முடியாது. அரசமைப்பின் முக்கிய அம்சங்களான பேச்சுரிமை, ஜனநாயகம், சமூகவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை எவராலும் மாற்ற முடியாது.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், இந்திரா காந்தி அரசமைப்பை சிதைத்தார். நாட்டின் வரலாற்றில் அரசமைப்பை சிதைக்கும் பாவச்செயலை காங்கிரஸ்தான் செய்தது, இந்த நிலையில் இப்போது அவர்கள் நம் மீது குற்றஞ்சுமத்துகின்றனர்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top