வக்பு பெயரில் ஏழைகள் நிலம் அபகரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை: ஷோபா கரந்தலாஜே உறுதி

வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில மாபியாக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்கு சொந்தமான 404 ஏக்கர் நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருகிறது. இதைக் கண்டித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே முனம்பம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை (நவம்பர் 14) சந்தித்து பேசினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில மாபியாக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு வரையில் முனம்பம் பகுதி மக்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருகிறது. கர்நாடகாவில் மட்டும் சுமார் 29 ஆயிரம் ஏக்கர் நிலத்தை முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து வக்பு சட்டத் திருத்த மசோதா பற்றி ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top