சூர்யா நடித்து வெளியான கங்குவா படத்தை பார்ப்பதற்கு செலவு செய்கிற பணத்தை ஏழை குழந்தைகளுக்கு சேவை செய்கிற குருகுலத்திற்கு ரூ.300 அளித்துள்ளார் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்.
இதுகுறித்து அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளத்தில்; கங்குவா மாதிரியான படங்களை பார்ப்பதற்கு செலவு செய்கிற காசை ஏழை குழந்தைகளுக்கு சேவை செய்கிற சிவானந்த குருகுலத்திற்கு அளிக்கலாமே என்று முடிவுசெய்து குருகுலத்திற்கு ரூ.300 அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சை பெருவுடையார் கோயிலில் செலுத்துகின்ற உண்டியல் பணத்தை பள்ளிக்கூடம் கட்ட அளிக்க வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு ஹிந்துக்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தற்போது சூர்யாவின் கங்குவா படம் வெளியான நிலையில், அப்படத்திற்கு வாங்கப்படும் டிக்கெட் விலைக்கு ஈடான ரூ.300 பணத்தை குருகுலத்திற்கு அனுப்பியுள்ளார். இவரது செயலுக்கு நெட்டிசன்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஹிந்துக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.