திராவிட மாடலின் மற்றும் ஒரு விஞ்ஞான ஊழல் : ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்தியதால் ரூ.1,900 கோடி நஷ்டமாம்?

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசியை ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் மட்டுமே ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் முழு நேரக் கடைகள் 18,782ஆகவும், பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கிறது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் மூலம் சுமார் இரண்டு கோடி குடும்ப ரேஷன் அட்டைகளுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரேஷன் கடைகளுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை இலவசமாக அளித்து வருகிறது.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாவது குறித்து நாடு தழுவிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் 2022-23ம் ஆண்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் 6.2 சதவிகிதமும், ஆந்திர மாநிலத்தில் 1. 0 சதவிகிதமும் தெலுங்கானா மாநிலத்தில் 0.5 சதவிகிதமும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் மிக அதிகமாக 15.8% இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில் தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று விநியோகிக்கப்படும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்திய அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு சமமானது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இலவசமாக அரிசி வழங்கி வருகிறார். ஆனால் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ.1,900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக் குழு என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களுக்கு சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள் முறைகேடான வழிகளில் திமுக அரசு திருப்பி விடுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top