தமிழகத்தில் 2500 அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை, ஆனால் உதயநிதியை துதிபாடுவதில் மட்டும் துடிப்பாக இயங்குகிறார் அன்பில் மகேஷ் என்று, தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா காட்டமான விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில்; தமிழகத்தில் 2500 அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை. போதிய ஆசிரியர்கள், கட்டிடங்கள், கட்டமைப்பு இல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.
ஆனால், உதயநிதி துதி பாடுவதில் மட்டும் துடிப்பாக இயங்குகிறார் முழு நேர உதயநிதி ரசிகர் மன்ற தலைவரும், பகுதி நேர பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் என குறிப்பிட்டுள்ளார்.