தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் நல்ல உடல் நலத்துடன், மேலும் பலபல ஆண்டுகள் தங்கள் மேலான கருத்துக்களால் எங்களை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில்; தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், அமரர் எம்ஜிஆர் அவர்களது அமைச்சரவையில் இரண்டு முறை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றி, மருத்துவக் கட்டமைப்பில் தமிழகத்தை நாட்டின் முன்னணி இடத்துக்குக் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவருமான, ஐயா ஹெச்.வி.ஹண்டே அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சிறந்த எழுத்தாளரும், தேசியவாதியுமான ஐயா ஹெச்.வி.ஹண்டே அவர்கள், நல்ல உடல் நலத்துடன், மேலும் பலபல ஆண்டுகள் தங்கள் மேலான கருத்துக்களால் எங்களை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.