செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாற்றில், முன்னாள் பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின விழா நடைபெற்றது. அப்போது, தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஒரு லட்சம் பெண் குழந்தைகளை செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அடல் பிகாரி வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்; இன்றைய தினம், பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தின நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில், தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணன் ஹெச்.ராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் சரத்குமார், மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளரான மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவில், பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் திருவுருவப் படத்தை, மூத்த பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும், தமிழக பாஜக சார்பில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கனவுத் திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், 1 லட்சம் பெண் குழந்தைகளை இணைக்கும் நிகழ்ச்சியை, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநர், அக்கா திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுடன் இணைந்து தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. விழாவில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, டால்ஃபின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் திருமதி பிரமிளா சம்பத், சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சாய் சத்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் காளிதாஸ், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் லியோ சுந்தரம் மற்றும் திருமதி. உமா ஆனந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.