‘திமுக ஆட்சி அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்’ பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் எப்ஐஆர் பார்த்து ரத்தம் கொதிக்கிறது: திமுகவை காரி துப்பிய தலைவர் அண்ணாமலை

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் எப்ஐஆரை பார்த்து ரத்தம் கொதிக்கிறது எனவும், இந்த எப்ஐஆர் வெளியில் எப்படி விடப்பட்டது எனவும் கேள்வி எழுப்பி தலைவர் அண்ணாமலை திமுக அரசை காரி துப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நாம் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? மக்களுக்கு பயன்படுகிறதா என எனக்கு நானே கேள்வி கேட்கிறேன்.

சித்தாந்தம்,சித்தாந்தம் என தொங்கிக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டு உள்ளோமா என என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டு உள்ளேன். இன்று காலையில் இருந்து எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி, நான் அரசியலில் தொடர வேண்டுமா என்ற கேள்வி. தமிழகத்தில் பட்டப்பகலில் ஆளுநர் மாளிகையில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டடத்திற்கு பின்னால், கொடூரமாக சித்ரவதை செய்து, எதற்கு பெண்ணாக பிறந்தோம் என நினைக்கும் அளவுக்கு ஒரு கொடூரமான செயல் சென்னையில் நடந்துள்ளது. அது வழக்கம் போல் அரசியல் ஆகி உள்ளது. பாஜக இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று சொல்வதை விட, எங்கள் அரசியல் பாதையை தீர்மானிக்கும் தருணமாக இதனை பார்க்கிறேன்.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. ஞானசேகரன் திமுகவில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பில் உள்ள ஆள். ஏற்கனவே குற்றங்கள் உள்ள ஆள். திமுகவில் தன்னை இணைத்து கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைத்தளத்தில் பதிவிடவும் அவருக்கு பதவி தேவைப்படுகிறது. கட்சி பத்திரிகையில், அவரது பெயர் உள்ளது. அக்கட்சி பத்திரிகையிலும் வந்துள்ளது.

எங்களுடைய குற்றச்சாட்டு அவர் திமுக.,வில் இருப்பது இல்லை. ஒரு குற்றவாளி, இதேபோல் கொடூர செயலை செய்தவன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, அமைச்சர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து, உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் காட்ட நான் திமுககாரன் என்ற காட்ட புகைப்படம் தேவைப்படுகிறது. ரவுடி ரிஜிஸ்டரில் தனது பெயர் வரக்கூடாது என்பதற்கு அது தேவைப்படுகிறது. அரசியல் அடையாளத்திற்கு தேவைப்படுகிறது. அதை வைத்து மறுபடியும் ஒரு குற்றத்தை செய்துள்ளான். இதுதான் எங்களின் கோபம். அவன் திமுக.,வில் இருக்கிறது கோபம் கிடையாது. திமுக என்ற போர்வை குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது.

தி.மு.க, என்ற போர்வை இருந்ததினால் மட்டும் தான் இந்த குற்றவாளி அந்த பெண் மீது கை வைத்துள்ளான். திமுக கட்சி பதவி இருக்கிறது. அமைச்சர் பக்கத்தில் இருக்கிறான் என்பதற்காக காவல் நிலையத்தில் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே இதேபோன்ற ஒரு குற்றத்தை செய்திருக்கிறான். அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்துள்ளான். எப்ஐஆர் எப்படி வெளியானது? காவல் துறையைத் தவிர வேறு யாரும் எப்ஐஆர்.,ஐ வெளியில் விட முடியாது.

அது ஒரு எப்.ஐ.ஆரா. , படிக்காதவன் எழுதினால் கூட ஒழுக்கமா எழுதுவான். அதை பார்க்கும் போது, குற்றம் செய்தது பெண்ணா? குற்றம் செய்தது அந்த அயோக்கியனா என சந்தேகம் எழுகிறது. அந்த பெண் குற்றம் செய்தது போல் எப்ஐஆர் எழுதப்பட்டு உள்ளது. அதை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. காக்கிச்சட்டை அணிந்து இந்த எப்ஐஆர் எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா? த்தூ.. இந்த எப்ஐஆர்., நீதிமன்றத்தில் நிற்குமா?

மொபைல் எண், அப்பா பெயர், ஊர் பெயர் வெளியாகி உள்ளது. இதற்கு வெட்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்தை நாசம் செய்துவிட்டீர்கள். ஏழு தலைமுறைக்கு ஒரு கறுப்பு அடையாளம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்களா?

மூன்று மாதம் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. அண்ணாமலை திரும்பி வந்ததால், மறுபடியும் கலவரம் வெடித்தது என அமைச்சர் சொல்கிறார். இதற்கு வெட்கப்படணும். நீங்கள் எல்லாம் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படணும். கட்சி பதவியில் இருப்பதால் மரியாதையாக பேசி கொண்டு உள்ளேன்.
தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறேன். அதனால் மரியாதையாக பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்ததால் மரியாதையாக பேசிக் கொண்டு இருக்கிறேன். வீதிக்கு தனி மனிதனாக வந்தால் வேறு மாதிரி இருக்கும். திமுக., பொறுப்பில் இருந்ததால் அவனை சோதனை செய்யவில்லை. அதனால் அவன் தைரியமாக வெளியே வந்தான்.

கட்சி தலைவராக, தொண்டராக நான் ஒரு சபதம் எடுத்துள்ளேன். எத்தனை ஆர்ப்பாட்டம் நடத்துவது? சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போனால், முன்னாள் ஆளுநரை பிடித்து வைத்துள்ளனர். நாயை பிடிப்பது போல் பிடித்து வைத்துள்ளனர். எங்கள் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை என ஆர்ப்பாட்டம் செய்கிறோமா? இனிமேல் ஆர்ப்பாட்டம் வேலையெல்லாம் இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கு வீடு முன்பு போராட்டம் நடக்கும். வீட்டிற்கு வெளியே வந்து பா.ஜ.க., தொண்டன் போராட்டம் நடத்துவான். நாளை எனக்கு நானே சாட்டை அடி கொடுக்க கூடிய நிகழ்வை நாளை நடத்தப்போகிறேன். நாளை காலை 6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போகிறேன். திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு போட மாட்டேன். நாளையில் இருந்து திமுக ஆட்சியில் இருந்து இறங்கும் வரை செருப்பு போட மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பை கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருக்க போகிறேன் பிப்ரவரி இரண்டாவது வாரம் ஆறுபடை வீட்டிற்கு சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்.
சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள். கேட்டால் கட்சி போர்வைக்குள் ஒழிந்து கொள்வீர்கள். நாளையில் இருந்து எனது அரசியலும் இப்படித்தான் இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உங்களுக்கு எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்த எப்ஐஆர் வெளியில் விடப்பட்டு உள்ளது. அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டுமே வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார்.

எனக்கு இதுதான் வேலையா? சிறைத்துறையை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வேலையை ஒழுங்காக செய்துள்ளீர்களா? தப்பு நடந்தால், அதை வெளியில் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பது தான் எங்கள் வேலை. பதில் சொல்வது உங்கள் வேலை. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார். பேட்டி முடிந்ததும் தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே அவர் கூறியபடி செருப்பை கழற்றினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top