தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்டமாக 33 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. பின், நவம்பரில், உட்கட்சி தேர்தல் துவங்கியது. முதல் கட்டமாக, கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்து, மண்டல தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. அதில் முதற்கட்ட மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியானது.
![](https://oreynadu.in/wp-content/uploads/2025/01/01-dist-pres-740x1024.jpg)
இதுகுறித்து மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுறுத்திலின் படி, அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி விபரங்கள்:
1) கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் K.கோபகுமார்
2) கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் R.T. சுரேஷ்
3) தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் K.சரவண கிருஷ்ணன்
4) திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் A.முத்து பழவேசம்
5) திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் S.P.தமிழ்செல்வன்
6) தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி
7) விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் G.பாண்டுரங்கன்
8) சிவகங்கை மாவட்ட தலைவர் D.பாண்டிதுரை
9) மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் A.P.ராஜசிம்மன்
10) மதுரை மேற்கு மாவட்ட தலைவர் K.சிவலிங்கம்
11) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் D.முத்துராமலிங்கம்
12) தேனி மாவட்ட தலைவர் P.ராஜபாண்டி
13) திருச்சி நகர் மாவட்ட தலைவர் K.ஒண்டி முத்து
14) திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் R.அஞ்சா நெஞ்சன்
15) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் C.ஜெகதீசன்
16) அரியலூர் மாவட்ட தலைவர் ஸ்ரீமதி Dr.A.பரமேஸ்வரி
17) தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி
18) திருவாரூர் மாவட்ட தலைவர் V.K.செல்வம் @ செல்வமகன்
![](https://oreynadu.in/wp-content/uploads/2025/01/02-dist-pres-717x1024.jpg)
19) மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் R.பாலு
20) கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி
21) கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் K.தமிழழகன்
22) செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் Dr.M.பிரவீண்குமார்
23) செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் N.ரகுராமன்
24) காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன்
25) திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் S.சுந்தரம்
26) கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் Dr.M.பாலசுந்தரம்
27) வேலூர் மாவட்ட தலைவர் V.தசரதன்
28) திருப்பத்தூர் மாவட்ட தலைவர் M.தண்டாயுதபாணி
29) சேலம் நகர் மாவட்ட தலைவர் T.V.சசிகுமார்
30) நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் K.P.சரவணன்
31) நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் M.ராஜேஷ்குமார்
32) கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட தலைவர் R.சந்திரசேகர்
33) நீலகிரி மாவட்ட தலைவர் Dr.A.தர்மன்
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.