பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஏரியூரில் கெட்அவுட் ஸ்டாலின் என்கின்ற பதாகைகளை ஏந்தி தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமையில் முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து மாவட்டத் தலைவர் சரவணன் ஆலோசனைகளை நடத்தினார்.
இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கெட்அவுட் ஸ்டாலின் என்கின்ற பதாகைகளை கைகளில் ஏந்தி ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கர், ஐடி பிரிவு மாநில செயலாளர் சூர்யா, நிர்வாகிகள் ஹரிஷ், சதாசிவம், சரவணன், பூமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.