கோவை, கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும் பேரூராட்சி துணைத்தலைவருமான கே.என்.சண்முகம், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் நிர்மலா தேவி ஆறுச்சாமி, ஆகியோர் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் குறித்து தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும், பேரூராட்சி துணைத்தலைவருமான கே.என்.சண்முகம், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் நிர்மலா தேவி ஆறுச்சாமி, ஆகியோர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இருவரையும் மகிழ்வுடன் வரவேற்று, தமிழகத்தில் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேர்மையான அரசியல் மாற்றத்திற்கு, இருவரின் சீரிய அரசியல் அனுபவமும், மக்கள் பணிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.