திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரும், மாநிலத் துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் வெற்றியை நோக்கி செல்வதாக அத்தொகுதி மக்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குனேரி, இராதாபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இங்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் கைகளே உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது
திருநெல்வேலி மக்களவை தொகுதியின் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு பாஜகவினர் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று செயல்வீரர் கூட்டத்தை நடத்தி, அங்குள்ள கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என அனைவரையும் சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி நேற்று ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது ,வாக்காளர்களிடம் மத்திய அரசு செய்த நலத்திட்டங்களை எவ்வாறு எடுத்துக் கூறுவது போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைக்கூட்டத்திற்கு வருகை புரிந்த நயினார் நாகேந்திரனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலியில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமரின் உரை, நயினார் நாகேந்திரனுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தேர்தல் நெருங்க, நெருங்க மக்களின் ஆதரவு தாமரை சின்னத்திற்கே பெருகும் எனவும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி சாராதவர்களின் கருத்தாக உள்ளது.