புனித வெள்ளி தினமான இன்று அனைவரின் இதயத்தையும் இயேசுபிரானின் அன்பும் அருளும் அமைதியால் நிரப்பட்டும் என தலைவர் அண்ணாமலை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
இயேசுபிரான், சக மனிதர்கள் நல்வாழ்வுக்காக சிலுவையில் அறையப்பட்ட தியாக தினத்தை நினைவுகூரும் புனித வெள்ளி தினமான இன்று, அவருடைய அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்.
சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா, இயேசுபிரான் நம்மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தை உணர்த்துவதோடு, இரக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்கு நம்மை ஊக்குவிக்கட்டும். அனைவருக்கும், ஆசீர்வதிக்கப்பட்ட, அர்த்தமுள்ள பெருநாளாக அமையட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.