ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். சென்னையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணியிலும் ஈடுபடுகிறார்.
இது தொடர்பாக தென் சென்னை பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியதாவது: ஏப்ரல் 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டமும் சென்னையில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
சென்னையில் பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியிலும் ஈடுபடுகிறார். தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை பா.ஜ.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.