நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவருக்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதிகுட்பட்ட குன்னூர், அதிகாரட்டி மற்றும் ஆருகுச்சி கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து எல்.முருகன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மேலும் அங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படுகிற விளையாட்டு மைதானம், தார் சாலை வசதி, பார்க்கிங் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.