தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி 39 பாராளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், மாநில தலைவர், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, மாநில தேர்தல் பிரச்சார பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை (04.04.2024) வியாழக்கிழமை தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை அவர்களின் பாராளுமன்ற தொகுதிகள் வாரியான சுற்றுப்பயணம் வெளியிடப்பட்டுள்ளது.
காலை 9 மணி திருப்பூர் தொகுதி, கவுந்தப்பாடி
காலை 12 மணி ஈரோடு தொகுதி, சித்தோடு
மதியம் 3 மணி கரூர் தொகுதி, குஜிலியம்பாறை
மாலை 5 முதல் 6 மணி, நாமக்கல் தொகுதி, பரமத்தி, வெண்ணந்தூர்,
இரவு 9 மணி சேலம் தொகுதி அம்மாபேட்டை
இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.