திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும், மாநில செயலாளருமான அஸ்வத்தாமன் கிராமங்கள் தோறும் சென்று தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி இன்று (ஏப்ரல் 03) திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி ,கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சனாபுரம், பள்ளக்கொள்ளை பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், காளிகாபுரம், சாமந்திபுரம், ராமநாதபுரம், துரிஞ்சாபுரம் பகுதிகளில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், நூற்றுக்கணக்கான மக்கள் நலத்திட்டங்களால் ,மக்கள் பெற்ற நன்மைகளை எடுத்துக்கூறி தாமரை சின்னத்திற்கு அஸ்வத்தாமன் வாக்கு சேகரித்தார்.
மக்களிடத்தில் அவர் கூறும்போது; மற்ற நாடாளுமன்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலை தொகுதி திமுகவால் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.