ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதிகுட்பட்ட அம்பத்தூரில் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘‘பாஜகவின் கற்பனைப்படி நாக்பூர் தலைநகர் ஆக வேண்டும். இந்தியா மத சார்புள்ள, ஒரே மதம் உள்ள நாடாக வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வேண்டும். பாடத்திட்டத்திலும், புராணமே சரித்திரமாக மாற வேண்டும். அனைத்து தொழிலும் ஒரு சிறு குழுவுக்கே போய் சேர வேண்டும். இதெல்லாம் நடந்தா இப்ப மட்டும் இல்ல, எப்பொழுதுமே நாம் எல்லோருமே தெருவில் நிற்க வேண்டும். அதை நடக்கவிடக் கூடாது என்று கமல், திமுகவிற்கு ஜால்ரா அடித்திருந்தார்.
இது குறித்து கோவை சரவணம்பட்டியில் செய்தியாளர்கள் (ஏப்ரல் 08) பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:
மெண்டல் ஹாஸ்பிடல் போய் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். யார் சொன்னாலும் கூட மூளையை சோதனை செய்ய வேண்டும். உண்மையாலுமே நல்லா இருக்காங்களா? இரண்டு மூளையும் வேலை செய்கிறதா? சுயநினைவுடன் தான் இருக்காங்களா? சரியா சாப்பிடறாங்களா? என்று கமல்ஹாசனுக்கு மருத்துவ ஆலோசனை தரவேண்டும்.
எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும். கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா? இல்லை தி.மு.க.வுக்கு தன்னுடைய கட்சியை ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக விற்கறதுக்காக இப்படி கூவ வேண்டும் என்று கமல்ஹாசன் நினைக்கிறாரா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.