கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.ஜி.புதூர் பகுதியில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தலைவர் அண்ணாமலை, அதிமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ‘‘பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பளித்தால், இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தில் இருக்காது. 2024 தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிடக் கட்சி மட்டும், நிச்சயம் இருக்காது. திமுகவை எதிர்ப்பதற்கென்றே ஒரு கட்சி தமிழகத்துக்குத் தேவையா என மக்கள் நினைப்பதாகக் குறிப்பிட்டார். தான் என்ற அகம்பாவத்துடனும், பெரியண்ணன் மனோபாவத்தோடும் அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் நடந்துகொள்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு அதிமுகவின் மிகப்பெரிய ஊழலே காரணம்’’ என்றார்.