அயோத்தி ராமர் கோவில், வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பல்வேறு சாதனைகள் அடங்கிய, புதிய பிரச்சார பாடல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வருவார் என பாமர மக்கள் முதல் தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகள் வரை தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், பாஜகவின் சாதனைகள் அடங்கிய புதிய பிரச்சார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அயோத்தி இராமர் கோவில், வந்தே பாரத் ரயில், உள்ளிட்ட பாஜக அரசின் பல சாதனைத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், புதிய பாராளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவியது, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவின் சாதனைகளும் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளது.
இந்த பாடல் 12 இந்திய மொழிகளில் பாடப்பட்டு உள்ளது. தேசத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பலதரப்பட்ட பின்னணியில் உள்ளவர்கள் எல்லா மொழிகளிலும் பேசுபவர்கள் ஒருமித்த குரலில் ஒன்றை சொல்கிறார்கள். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதமர் மோடி எப்படி நிறைவேற்றினார் என்பதை இந்த பாடல் எடுத்துக்காட்டுகிறது.
பாஜக அரசின் கொள்கைகளால் ஊழல்வாதிகள் பயத்தில் நடுங்குவதாகவும் புதிய பிரச்சாரப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த புதிய பிரச்சார பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் இப்பாடலை விரும்பி கேட்டு வருகின்றனர்.