“தண்ணீர் தராமல் நாட்டை நாசமாக்கிட்டேங்களே ஐய்யா” என திமுக அமைச்சர் மூர்த்தியிடம் கேள்வி கேட்ட விவசாயியை திமுக நிர்வாகிகள் அவரை தூக்கி வீசி, அங்கிருந்து விரட்டி அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024 நாடு முழுவதும் களை கட்டி வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியை மக்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்கு கேட்டு சென்றால் மக்கள் துரத்தி அடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக கூட்டணியை சேர்ந்த மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக மேலூரில் பிரச்சாரம் செய்ய சென்ற திமுக அமைச்சர் மூர்த்தியிடம், “தண்ணி தரேன்னு சொல்லி நாட்டையே நாசமாக்கிடீங்களே ஐய்யா” என விவசாயி ஒருவர் கேள்வி கேட்டார்.
இதனை எதிர்பார்க்காத மூர்த்தி சற்று திருதிருவென முழிக்கத்தொடங்கினார். அப்போது, ஆவேசம் அடைந்த அமைச்சர் மூர்த்தி, அந்த விவசாயியை நோக்கி முட்டாள் என்று மைக்கிலேயே திட்டினார். போதாகுறைக்கு, திமுக நிர்வாகிகள் விவசாயியை தள்ளிவிட்டு விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவிடம் ஆட்சி இருந்தால் கேள்வி எழுப்பும் விவசாயிகளை இப்படித்தான் குண்டர்களை வைத்து விரட்டி அடிப்பார்கள். தமிழகம் முழுவதும் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுகவை இந்த முறை மக்கள் புறக்கணித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது வாக்குகளை செலுத்த முன்வரத் தொடங்கிவிட்டனர்.