தமிழகம் முழுவதும், நமது மக்கள், லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இல்லாமல், முழுமையாக, மக்களுக்காக நிறைவேற்றப்படும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை (ஏப்ரல் 10) கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வீரியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், சித்ரா நகர், நேரு நகர், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சேரன் மாநகர் பகுதிகளில், பொதுமக்களின் எழுச்சிமிகு வரவேற்புடன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் தலைவர் அண்ணாமலை.
அப்போது அங்கு பொதுமக்கள் முன்பு அவர் பேசியதாவது:
வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருப்பது, பாராளுமன்றத்துக்கான தேர்தல், நாட்டின் பிரதமர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. அவரது கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியை இதற்கு முன்பிருந்த கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள்.
தமிழகத்தில் கடந்த 33 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் திமுகவோ, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவோ எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல், தற்போது, நாட்டின் பிரதமருக்கான தேர்தலிலும், அதே பொய்யான பழைய வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை, இப்போது மட்டும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்.
இன்று கோவையில் தண்ணீர்ப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால், கடுமையான வறட்சிக்கு நமது கொங்கு பகுதி சென்று விடும். அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க, விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்று, நமக்கு கோவை பாராளுமன்றத் தொகுதி, வறட்சியால் பாதிக்கப்படாமல் காப்போம் என்று உறுதி அளிக்கிறேன்.
தமிழகம் முழுவதும், நமது மக்கள், லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இல்லாமல், முழுமையாக, மக்களுக்காக நிறைவேற்றப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பாரதப் பிரதமர் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்திட, நமது கோவை பாராளுமன்றத் தொகுதி வளர்ச்சி பெற்றிட, மக்கள் இம்முறை தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.