மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதியம் 1.15 மணிக்கு விமானம் மூலம் (ஏப்ரல் 12) மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்கிறார். பின்னர் கார் மூலம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர், அருள்மிகு ராஜ ராஜேஸ்வரி உடனுறை சத்தியகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரையில் மிகப்பிரமாண்டமான வாகன பேரணியில் பங்கேற்று பாஜக வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.