கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநிலத் தலைவருமான அண்ணாமலை லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவார் என அம்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அரசு வழக்கம்போல ஏவல்துறையான காவல்துறையை கொண்டு வழக்குப்போட்டுள்ளது.
கோவை ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரத்தில் தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தை நிறைவு செய்து வாகனத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த போலீசார் ஏன் இப்போது பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தலைவர் அண்ணாமலை போலீசாருடன் எதற்காக வண்டியை மறித்துள்ளீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். பிரச்சாரம் முடிந்து வீட்டுக்கு செல்லும்போது வழியில் உள்ளவர்களுக்கு வாகனத்தில் இருந்தவாறு கைப்கூப்பி கும்பிடக்கூடாதா என காட்டமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.
இந்த நிலையில், கோவையில் பாஜக வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தில் திமுக அரசு ஏவல்துறையான காவல்துறையை வைத்து தலைவர் அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கு எல்லாம் பாஜக தொண்டர்கள் அஞ்சப்போவதில்லை எனவும், தேர்தல் பிரச்சாரத்தை இன்னும் அதிகப்படுத்துவோம் எனவும் கோவைத்தொகுதியை கைப்பற்றுவோம் என பாஜகவினர் சூளுரைக்கின்றனர்.