திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 12 லட்சம் கோடி ஊழல்: பல்லடத்தில் அண்ணாமலை!

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தது. தற்போது அதே கூட்டணி இ.ண்.டி. என்று மீண்டும் வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் நேற்று இரவு (ஏப்ரல் 15) பாஜக வேட்பாளரும், மாநிலத் தலைவருமான அண்ணாமலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் மக்கள் முன்பு பேசியதாவது:

கடந்த 2004 – 2014 ஆண்டுகளில், திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இதே இ.ன்.டி கூட்டணி கட்சிகள், பிரதமர் யார் என்றே அறிவிக்காமல் சுமார் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்து ஆட்சி நடத்தினர். தற்போது மீண்டும் அதே போன்ற ஊழல் ஆட்சியைக் கொண்டு வர, பிரதமர் யார் என்றே அறிவிக்காமல் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் இம்முறை, மீண்டும் மோடி ஆட்சி என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி, ஏழை எளிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கான ஆட்சியாக அமைந்தது. வரப்போகும் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் முதன்மை நாடாக நமது நாடு உருவாவதற்கு அடித்தளம் அமைக்கும் ஆட்சியாக அமையும்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது கோவையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி விட்டது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தாமல், கோவையின் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, குடி தண்ணீர், பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் என அனைத்தும் பற்றாக்குறையாக இருக்கிறது. இதனைச் சரி செய்ய, நமக்கு, நமது பிரதமரின் திட்டங்களை, ஊழல் இல்லாமல், முழுமையாகச் செயல்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் தேவை.

கோவை பாராளுமன்றத் தொகுதியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நேரடிப் பார்வையில் தீர்வு கிடைத்திட, கோவை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறந்திட, நமது இளைஞர்கள், தாய்மார்கள் முன்னேற்றம் பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top