நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் 69.46 சதவிகிதம் வாக்குப்பதிவு!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நடந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் அப்போதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவிகிதத்தை பார்க்கலாம்: (நள்ளிரவு 12 மணி நிலவரம்)

    திருவள்ளூர் – 68.31 சதவிகிதம்
    வட சென்னை – 60.13 சதவிகிதம்
    தென் சென்னை – 54.27 சதவிகிதம்
    மத்திய சென்னை – 53.91 சதவிகிதம்
    ஸ்ரீபெரும்புதூர் – 60.21 சதவிகிதம்
    காஞ்சிபுரம் – 71.55 சதவிகிதம்
    அரக்கோணம் – 74.08 சதவிகிதம்
    வேலூர் – 73.42 சதவிகிதம்
    கிருஷ்ணகிரி – 71.31 சதவிகிதம்
    தருமபுரி – 81.48 சதவிகிதம்
    திருவண்ணாமலை – 73.88 சதவிகிதம்
    ஆரணி – 75.65 சதவிகிதம்
    விழுப்புரம்- 76.47 சதவிகிதம்
    கள்ளக்குறிச்சி – 79.25 சதவிகிதம்
    சேலம்- 78.13 சதவிகிதம்
    நாமக்கல் – 78.16 சதவிகிதம்
    ஈரோடு – 70.54 சதவிகிதம்
    திருப்பூர் – 70.58 சதவிகிதம்
    நீலகிரி – 70.93 சதவிகிதம்
    கோவை – 64.81 சதவிகிதம்
    பொள்ளாச்சி -70.70 சதவிகிதம்
    திண்டுக்கல் – 70.99 சதவிகிதம்
    கரூர்- 78.61 சதவிகிதம்
    திருச்சி -67.45 சதவிகிதம்
    பெரம்பலூர் – 77.37 சதவிகிதம்
    கடலூர் – 72.28 சதவிகிதம்
    சிதம்பரம் – 75.32 சதவிகிதம்
    மயிலாடுதுறை – 70.06 சதவிகிதம்
    நாகப்பட்டினம் – 71.55 சதவிகிதம்
    தஞ்சாவூர்- 69.18 சதவிகிதம்
    சிவகங்கை – 63.94 சதவிகிதம்
    மதுரை – 61.92 சதவிகிதம்
    தேனி – 69.87 சதவிகிதம்
    விருதுநகர் -70.17 சதவிகிதம்
    ராமநாதபுரம் -68.18 சதவிகிதம்
    தூத்துக்குடி – 59.96 சதவிகிதம்
    தென்காசி – 67.55 சதவிகிதம்
    திருநெல்வேலி – 64.10 சதவிகிதம்
    கன்னியாகுமரி – 65.46 சதவிகிதம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top