தேர்தல் முடியும்வரை கும்மிடிப்பூண்டியை தாண்டிவிடாதீர்கள்: திமுகவுக்கு உத்தரவு போட்ட காங்கிரஸ்!

‘‘இந்தியாவை காக்க எங்களுக்கு வாக்களியுங்கள்’ என, தி.மு.க., தேர்தல் பிரசாரத்துடன் விளம்பரமும் செய்தது. ஆனால், தமிழகத்தை விட்டு தி.மு.க., தலைவர்கள் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்ய, ‘இ.ண்.டி.’ கூட்டணி தலைவர்கள் விரும்பவில்லை என்ற தகவல், தற்போது டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உட்பட சில தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், தமிழர்கள் அதிகம் உள்ளதால் அங்கு இவர்கள் பிரசாரம் செய்வர்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது; ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை. இந்தநிலையில், தமிழக இ.ண்.டி. கூட்டணியினர் டெல்லி பக்கமோ, வடமாநில பக்கமோ தயவு செய்து பிரசாரத்திற்கு வர வேண்டாம். ஜூன் 4 வரை தமிழகத்திலேயே இருக்கவும்’ என, தி.மு.க., தலைமைக்கு தகவல் சொல்லப்பட்டதாம்.

சனாதனம் குறித்து, திமுக அமைச்சர் உதயநிதி மற்றும் 2ஜி ஊழல் ராசா, திருமாவளவன் உள்ளிட்டோர் பேசியது வடமாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ‘ராமரை எதிர்க்கும் கட்சி தி.மு.க., மற்றும் இ.ண்.டி. கூட்டணியும், ராமருக்கு எதிரானது’ என, பா.ஜ.க., தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

‘இதனால், தி.மு.க., தலைவர்கள் தமிழகத்திலேயே இருப்பது தான் கூட்டணிக்கு நல்லது’ என, காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தி.மு.க., தலைமைக்கு சொல்லி விட்டாராம்.
கும்மிடிப்பூண்டியை தாண்டாத கட்சி திமுக என பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர். தற்போது அதனை காங்கிரஸ் நிரூபித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top