ஹிந்து கடவுள்களை காங்கிரஸ் அவமதிக்கிறது : பிரதமர் மோடி வேதனை!

இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்கு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாதுகாப்பான தேசம் மற்றும் வலுவான அரசின் முக்கியத்துவத்தை ராஜஸ்தான் மக்கள் அறிவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வலுவான பா.ஜ.க., ஆட்சி அமைக்க வாக்களித்தீர்கள்.

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற்றால், உங்கள் சொத்துகளை பறிமுதல் செய்து ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான, நேர்மையான அரசு என்ன செய்ய முடியும் என்பதை கடந்த பத்து ஆண்டுகளில் அனைவரும் பார்த்திருக்கிறார்கள். ஹனுமன் மற்றும் ராமரை காங்கிரஸ் அவமதிக்கிறது. ஒற்றுமையே ராஜஸ்தானின் மிகப்பெரிய பலம், இங்கு மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரசின் திருப்திபடுத்தும் அரசியலை அம்பலப்படுத்தினேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் பணவீக்கம் நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட பா.ஜ.க.,, ஆட்சியில் மாபியா, குற்றவாளிகள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top