மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்தார். பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது கொடைக்கானல் செல்வதாக கூறப்பட்டுள்ளது.
சீனா ஆதரவு அதிபர் தற்போது மாலத்தீவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் உள்ள உறவுகள் சீர் கேட்டு இருப்பதும் நம் மக்கள் அறிந்ததே.
இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் திறப்பு விழாவில் சீன ராக்கெட் வைத்து விளம்பரம் கொடுத்தவர், அரசு பேருந்து பெயர் பலகையில் சீன எழுத்தை வரவைத்த பெருமைக்குரிய முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்வது, தேசத்துக்கு எதிராக சீனாவுடன் என்ன ஒப்பந்தம் போடப்படும் என்று கேள்வி எழுப்புகின்றனர் தேச பக்தர்கள்.
இதனால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஸ்டாலின் மாலத்தீவு செல்லும் முடிவை கைவிட்டுவிட்டு, கொடைக்கானல் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.