குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள குஜராத் பா.ஜ.க., அலுவலகமான கமலாலயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 01) வருகை தந்தார்.
சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத்நகர் நகரில் தேர்தல் பேரணியில் அவர் பங்கேற்ற பிறகு இந்த நிகழ்வு நிகழ்ந்தது. தனது வருகையின் படங்களைப் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக நிர்வாகிகளை சந்தித்தது மகிழ்ச்சி எனக்கூறினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
“பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தாவில் நேற்று பாஜக சார்பில் நடந்த மாபெரும் பேரணிகளுக்குப் பிறகு, குஜராத் மாநில கட்சி அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று சக காரியகர்த்தாக்களுடன் நேரத்தைச் செலவிட்டேன். எங்கள் அரசாங்கம் மூன்றாவது முறையாக மீண்டும் வருவதை உறுதிசெய்ய காரியகர்த்தாக்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்’ என்றார்.