ஜார்கண்ட் மாநில அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு, கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மே-13 மற்றும் 20 தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆலம்கிர்ஆலம் உதவியாளர் சஞ்சீவ்லால் என்பவரது வீட்டில் பீரோவில் இருந்து கட்டு, கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தற்போது இ.ண்.டி. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ஊழல் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்ததை அமலாக்கத்துறை தக்க சமயத்தில் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.