கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 15 வரையில் சுமார் 42 கொலைகள் நடந்திருப்பது தமிழக மக்களை கதிகலங்க செய்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலாச்சாரம் என சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவிற்குத்தான் உள்ளது. இதற்கு சான்றாக கடந்த மாதம் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் சுமார் 42 கொலைகள் நடந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழக மக்கள் நடமாடுவதற்கே அச்சப்படும் அளவிற்குத்தான் உள்ளது திராவிட மாடல் ஆட்சியின் சட்டம், ஒழுங்கு. இனியாவது போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழித்து தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.