டெல்லி மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தமிழக தலைவர் அண்ணாமலை பெயர் இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது மூன்று கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரப் பணிகளுக்காக அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாஜக சார்பில் 40 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பெயர் உள்ளது. அதே போன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அண்ணாமலை பெயர் இடம் பெற்றிருப்பதை தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.