தமிழகத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ., வேலாயுதம் (73) இன்று (மே 08) அதிகாலை காலமானார்.
பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து கடந்த 1996ம் ஆண்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பகுதி மக்களுக்குஏராளமானநலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ., என்ற பெயரையும் வேலாயுதம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வேலாயுதம் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பாகும். வேலாயுதம் மறைவுக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், வேலாயுதம் இறுதி சடங்குகள் நாளை (09.05.2024) காலை 10.30 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழகருப்புக்கோட்டில் இல்லத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.