தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெலுங்கானா மாநிலத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தெலுங்கானா பா.ஜ.க முன்னாள் தலைவர் பண்டி சஞ்சயை ஆதரித்து நேற்று (மே 07) கரீம் நகரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பண்டி சஞ்சய் மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்களின் பாத யாத்திரைகள் இந்த மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இதனை பார்த்துத் தான் நான் தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டேன். மக்களுக்காக நடப்பது எளிதல்ல.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாதங்களை அளித்து தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இதனால் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்னும் 5 நாட்கள் தான் தேர்தல் பிரசாரம் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று 100 வாக்குகளை பெறுங்கள். தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.
சோனியா காந்தியின் அழைப்பிற்கு பிறகு அவர் பிரதமருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்த போலி வீடியோக்களை உருவாக்குவதில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பாஜக தலைவர்கள் சட்ட விரோத முஸ்லிம் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், முதல்வர் ரேவந்த் ரெட்டியின் விமர்சனங்களுக்கு எதிராகவும் அண்ணாமலை பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் அவருடைய பிரச்சாரத்தினை தெலுங்கானா மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். எனவே நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெறும் என்று தெலுங்கானா மக்கள் தெரிவித்துள்ளனர்.