விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்; விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நேற்று (மே 09) நடைபெற்ற பட்டாசு வெடிவிபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
சிவகாசியில் ஒரு தொழிற்சாலையில் விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வேதனை அடைந்தேன். என் எண்ணங்கள் யாவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.