காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகருமான சாம் பிட்ரோடா இந்தியாவில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கா, சீனர்களை போன்று உள்ளனர் என நிறவெறியுடன் ஒப்பிட்டு பேசினார். அவரின் பேச்சை கண்டிக்கும் விதமாக சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட பாஜக சார்பாக நேற்று ( மே 10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சாம் பிட்ரோடாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அரசின் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசுகையில்;
பிரிவினைவாதம், நிறவெறியை தூண்டும் வகையில் தென்மாநில மக்கள் ஆப்பிரிக்காவினர் போன்றும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் சீனாக்காரர்கள் போல் உள்ளனர் என்றும் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையிலும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் பேசி உள்ளார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத ரீதியாக பிரிக்கும் காங்கிரஸ் கட்சியை அரசியலை விட்டு அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், முரளிதரன், அயோத்தி ராமச்சந்திரன், கோட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை, ஏ.சி.முருகேசன், சுற்றுச்சூழல் பிரிவு நிர்வாகி கோபிநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.