ஒடிசா மாநிலத்தில் இன்று (மே 11) தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது மேடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பூர்ணமாசி ஜானி என்ற மூதாட்டிக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார் பிரதமர் மோடி. இதன் பின்னர் பூர்ணமாசி ஜானி பாதங்களை தொட்டு பிரதமர் மோடி வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.