முத்துராமலிங்க தேவர் குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக, பியூஸ் அளித்த புகாரின் பேரில் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: ‘‘கடந்த மூன்று ஆண்டுகளில், உண்மையை பேசியதற்காக, என் மீதும் பா.ஜ.க., நிர்வாகிகள் மீதும் பல்வேறு வழக்குகளை தி.மு.க., அரசு தொடர்ந்துள்ளது. மீண்டும் என் மீது புதிதாக ஒரு வழக்கு தொடர, அரசு அனுமதி அளித்துள்ளது. உண்மையை பேசியதற்காக வழக்கு தொடர்வதும், போதை ஆசாமிகளுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதும் தான் தி.மு.க.,வின் வாடிக்கையாக உள்ளது.
கடந்த 1956ல் முத்துராமலிங்க தேவர் கூறியதை, மக்களின் நினைவுகளில் இருந்து துடைத்தெறிய விரும்பிய தி.மு.க., அரசுக்கு நன்றி. உண்மையை வெளிக்கொண்டு வருவதில் இருந்து எங்களை தடுத்து நிறுத்த தி.மு.க.,வால் முடியாது. எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், அவற்றை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.