ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கண்டித்த ராதிகா சரத்குமார்!

திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவதூறு மற்றும் பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதற்காக கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன. முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். பாஜகவை சேர்ந்த சில பெண் தலைவர்கள் பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவறாக பேசிய நிலையில் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின்னர் மறுபடியும் சில நாட்கள் கழித்து திமுகவில் சேர்க்கப்பட்டார்.

மீண்டும் சர்ச்சையான நிலையில்தான் இவர் சமீபத்தில் மீண்டும் மேடை ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசினார். ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசினார்.

இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கருணாநிதியின் 100 நாள் பிறந்தநாள் விழா கூட்டத்தில்தான் அவர் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். முக்கியமாக பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை சொல்லி அவர் கடுமையாக பேசி இருந்தார். இதில் அவர் கைதாகி விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான், திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாககூறியதாக சரத் குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை கூறி பேசி இருந்தார்.

இந்த நிலையில்தான், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், ஏன்டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே… அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும் என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top