18-வது மக்களவைத் தேர்தலில் தற்போதே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி 5 ஆண்டுகாலம் மீண்டும் பிரதமராக தொடருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (மே 14) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் தற்போது வரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து உள்ளன. மொத்தம் 380 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 380 தொகுதிகளில் பாஜக 270 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட்டது. பிரதமர் மோடிக்கு மக்களவையில் முழு பெரும்பான்மை இப்போதே கிடைத்துவிட்டது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.