ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி. சுவாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்தார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை எட்டு முறை கன்னத்தில் அறைந்தும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் தாக்கியதாகவும் சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். பெண் எம்.பி., புகார் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் இன்று (மே 18) கைது செய்யப்பட்டு உள்ளார். சுவாதிமாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இதில், கெஜ்ரிவாலின் வீட்டில் பிபவ் குமார் இருக்கிறார் என தெரிய வந்தது.இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சிதான் பெண்களுக்குபாதுகாப்பானது என்றுகெஜ்ரிவால் பேசி வந்த நிலையில், தற்போது அந்த கட்சியின் பெண் எம்.பி., தனது சொந்தக் கட்சியினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் இத்தேர்தலில் நிராகரிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.