தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நகைக்கடை நடத்தி வருபவர் பிரபு. இவர் அரூரை சேர்ந்த திமுக தொண்டரணி பெண் நிர்வாகியான ஜெயா என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் வாங்கிய கடன் முழுவதையும் வட்டியுடன் ஜெயாவிற்கு திருப்பிக் கொடுத்துள்ளார். இதனை அடுத்து கடனுக்கு ஈடாக தான் கொடுத்த வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை பிரபு திருப்பி கேட்டபோது, அதனை 20 நாளில் திருப்பி தருவதாக கூறியுள்ளார் திமுக நிர்வாகி ஜெயா. ஆனால் வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை திருப்பி தராமல் அடி ஆட்களுடன் பிரபுவின் நகைக் கடைக்கு சென்று 5 கோடி கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது நகைக்கடை உரிமையாளர் வாங்கிய கடனை கொடுத்துவிட்டேன் மீண்டும் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஜெயா தனது செல்போனால் பிரபுவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பிரபு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். திமுக பெண் நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திமுக ஆட்சி என்பதற்காக அக்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். இதுபோன்றவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திவிட்டோமே என்று வேதனையுடன் பலர் கூறுகின்றனர்.