பிரதமர் நரேந்திர மோடி பேசியதை முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசுகிறார் என முன்னாள் ஆளுநரும், பாஜக தென்சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த தமிழர்களை அவமதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் ஒரு கருத்தை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார். மோடி, ஒடிசாவில் தனிநபரை குறிப்பிட்டு பேசினார்.
அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால், ஒட்டுமொத்த தமிழர்களை அவமதித்துவிட்டதாக, ஸ்டாலின்தான் திரித்துக் கூறி தமிழர்களை அவமானப்படுத்துகிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டாலின்தான் திரித்துப் பேசி வழக்கம்போல் பொய் பிரச்சாரம் செய்கிறார். ஸ்டாலின் திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.