திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது எப்படி என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று (ஆகஸ்ட் 08) தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் அவர் பேசுகையில்; ஊடகங்களில் பல முறை விவாதிக்கப்பட்ட விஷயத்தை பற்றி நான் கூற விரும்புகிறேன். தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் , திருச்செந்துறை எனும் கிராமம் இருக்கிறது. அங்கு 1500 ஆண்டுகள் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் , தனது 1.2 ஏக்கர் நிலத்தை விற்க சென்றபோது, உங்கள் கிராமம் முழுவதும் வக்ஃபு வாரிய நிலம் என கூறப்பட்டது. கொஞ்சம் சிந்தியுங்கள், முழு கிராமத்தையும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாக்கி இருக்கிறார்கள்.
அந்த கிராமத்தின் வரலாறு 1500 ஆண்டுகள் பழமையானது. ஆனால், மொத்த கிராமத்தையும் வக்ஃபு சொத்து என அறிவித்து இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் மதத்தை பார்க்காதீர்கள். ஒரு குடிமகனாக பாருங்கள்.ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இது தமிழ்நாட்டில், இது உத்திர பிரதேசத்தில் என பார்க்காதீர்கள். இதை கேட்டு இது எப்படி நடந்தது என்ற கவலை உங்களுக்கு இல்லையா? இது இயற்கையாகவே கவலை அளிக்கும் விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.